புங்குடுதீவு மகா வித்தியாலயம்
___________________________
புங்குடுதீவு மக்களின் அறிவுகண்ணை திறந்த மாபெரும் ஆலயம் இதுவாகும் .புங்குடுதீவின் சந்தையடி என்னும் பகுதியில் முன்பகுதியில் வெள்ளி விழா இரட்டை மடிக் கட்டிடத்தொடு கம்பீரமாக காட்சியளிக்கும் மகாவித்தியாலயம் பல் வேறு சாதனைகளைப் படைத்து வேறுபட்ட விற்பன்னர்களை உருவாக்கிய பெருமையோடு எழுந்து நிற்கிறது.
___________________________
புங்குடுதீவு மக்களின் அறிவுகண்ணை திறந்த மாபெரும் ஆலயம் இதுவாகும் .புங்குடுதீவின் சந்தையடி என்னும் பகுதியில் முன்பகுதியில் வெள்ளி விழா இரட்டை மடிக் கட்டிடத்தொடு கம்பீரமாக காட்சியளிக்கும் மகாவித்தியாலயம் பல் வேறு சாதனைகளைப் படைத்து வேறுபட்ட விற்பன்னர்களை உருவாக்கிய பெருமையோடு எழுந்து நிற்கிறது.
இலங்கைக்கு இலவசக் கல்விமுறையை அறிமுகப் படுத்திய சீ டபிள்யூ டபிள்யூ கன்னங்கராவின் காலத்தில் தீவுப்பகுதி பா.உ ஆகவும் சபாநாயகராகவும் சேர் வைத்திலிங்கம் துரைசாமி அவர்களின் முயற்சியினால் புங்குடுதீவு அரநினர் கனிஸ்ட ஆங்கில வித்தியாலயம் என்ற பெயரில் 17011946 இல் ஆரம்பிக்கப் பட்ட தி இந்த பாடசாலை .இந்த பாடசாலையை ஆரம்பிக்க முன்னின்று உழைத்தவர்கள் புங்குடுதீவின் கல்வி தந்தை பசுபதிபிள்ளயும் க.அம்பலவானர் ஆ.சரவணமுத்து உடையார் க.யோகுபிள்ளை அகியோருமாவர். இவ்வித்தியாலயம் முதலில்150மாணவர்களுடன் கணேச மகா வித்தியாலயத்தின் ஓரு பகுதியில் தான் ஆரம்பிக்கப்பட்டது .க.அம்பலவாணர் தனது பெருங்கருணையால் சொந்த காணியை தற்போது உள்ள இடத்தில பாடசாலை அமைக்க கொடுத்து கட்டிட வேலைகளை ஆரம்பித்தார்.புங்குடுதீவு மக்களின் சொந்த நிதி உதவியால் புதிய கட்டிடம்03.03.1948 இல் கட்டபட்டு இந்த இடத்துக்கு பாடசாலை மாற்றப்பட்டது . அப்போது அதிபராக இருந்த கே.எம்.தம்பையா அவர்கள் 15 . 09 . 1948 இல் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினை ஆரம்பித்தார் .சு.வில்வரத்தினம் பண்டிதர் மு.ஆறுமுகம் என்.ராசரத்தினம் டி.அம்பலவாணர் சி.முத்துக்குமாரசாமி திருமதி தா.யோகாம்பிகை செல்வி தி.ஞானபூரணி போன்ற ஆசிரியர்கள் இவரோடு ஒன்றாக பணி ஆற்றினான்ர்கள் ௦1௦4 .1945இல் அதிபராகப் பதவி ஏற்ற சு.வில்வரத்தினம் காலத்தில் பாடசாலை இரு நேரப் பாடசாலையாக மாற்றப் பட்டதோடு மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட வரலாறும் இடம் பெற்றது .இவரது காலத்திலேயே மாணவர்களுக்கான வழிபாட்டரை கூடுதல் வகுப்பறை உட்புற திறந்த வெளி அரங்கு கிணறு என்பனவும் உருவாக்கப் பட்டன.பின்னர் 01. 01 .1963 . முதல் வி.சோமசுந்தரம் அதிபராக சிலகாலம் கடமை ஏற்றார் பின்பு மீண்டும் சு.வில்வரத்னமே அதிபரானார்.இந்த காலத்தில் விளையாட்டு துறை பொறுப்பை எடுத்துக் கொண்ட ஆசிரியர் ஜே.செல்லையாவின் முயற்சியில் அறிய சாதனைகளை படைத்தது இப்பாடசாலை .(1963அப்போது தான் மடத்துவெளியை சேர்ந்த இந்த பாடசாலை மாணவன் சிவசம்பு தனபாலசுந்தரம் நூறு இருநூறு மீட்டர் ஓட்டப் போட்டிகளில் யாழ் மாவட்டத்திலேயே முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் அனுராதபுரத்தில் இரண்டாம் இடத்தையும் அடைந்து பெருமை தேடி கொடுத்தார் :இவர் பின்னர் உடட்பயிட்சி ஆசிரியராகி இப்போது கனடாவில் வசித்து வருகிறார் .
இந்த காலப் பகுதியில் எ.க.கந்தையா(கண்ணையா)இ.குலசேகரம்பிள்ளை சி.மாணிக்கம் க.தாமோதரம்பிள்ளை திருமதி சு.யோ.பூராசா திருமதி ந.இராசரத்தினம் திருமதி போ.விஜயரத்தினம் திருமதி க.வடிவேல் ஆகிய ஆசிரியர்கள் கல்விப் பணி புரிந்து வந்தனர் .
19.07 1967. . இல் இப்பாடசாலையின் அதிபராக சி.இராசநாயகம் நியமனமானார் .புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் சீருடையை அறிமுகப்படுத்தி வரலாறு படைத்தவர் இவரே.க போ த உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப் பட்டன .பாடசாலைக்கான கனி விசாலம் ஆக்கப் பட்டது .யாழ் மாவட்டப் பாடசாளைகளோடு போட்டிகளில் ஈடுபடும் அளவுக்கு மெய்வல்லுனர் துறை வளர்க்கப் பட்டது .அப்போது தான் புங்குடுதீவு கல்வி வளர்ச்சிக் கழகம் உருவானதோடு இபபாடசாலைக்கென விஞ்ஞான உபகரணங்கள் தளபாடங்கள் வாயு உருவாக்கிகள் தட்டச்சு இயந்திரங்கள் றோணியோ அச்சுபொறி கள் வழங்கி சிறப்பித்தன.இந்த கழகத்தின் தலைவராக க.மதியாபரணம் அவர்களும் செயலாளராக சு.யோ.பூராசா அவர்களும் இருந்து செய்த சேவை மெச்சத் தக்கது .பின்னர் 01.01 .1967 .இல் அதிபராகப் பொறுப்பேற்ற இ.சச்சிதானந்தன் காலத்தி ல் இவர் பாடசாலையில் தங்கி இருந்து மாலை நேரங்களில் ஆசிரியர் ஜே.செல்லையா அவர்களுடன் விளையாட்டு துறை பயிற்ச்சிகளை வழங்கி மேம்படுத்தினார் .இந்தக் காலத்தில் உயர்தர வகுப்புகளுக்கு கற்பித்தலில் மு.தளையசிங்கம் வித்துவான் பொன்.கனகசபை இராசரட்னம் செல்வி.ந.குழந்தைவேலு ஆகியோர் பெரும்பன்காற்றியதன் விளைவாக 1969 இல் ப.சுந்தரலிங்கம் என்ற மாணவன் முதலாவது மாணவனாக பல்கலைக் கழகம் தெரிவானான் 01..07 1970. . இல் அதிபராக நியமனமாகிய கு.வி.செல்லத்துரை அவர்களின் பெரு முயற்சியினால் தான் குடிநீர் விநியோக அமைப்பு உருவானது பிரபல வர்த்தகர் நா.க.மயில்வாகனம் நன்கொடையாக சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயத்தில் இருந்து கிணறு ஒன்றிலிருந்து ஆரம்பித்து வைக்கப் பட்டது .அப்போதைய மாணவர்களான வே.சத்தியகுமார் (உயரம் பாய்தல் )மு.அரியராசா(இருநூறு மீட்டர் ).ஆகியோர் காலையில் நடைபெற்ற அகில இலங்கை மெய்வலுனர் போட்டிகளில் பங்கு பற்றினர் .சதானந்தன் பரிதி வட்டம் எறியும் போட்டியில் யாழ் மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றார் .மு.இராமலிங்கம் (02.01 1972.)அதிபராக பணி புரிந்தகாலத்தில் க போ தா உ தர விஞ்ஞான வர்த்தக வகுப்புகள் ஆரம்பமானது
இந்தக் காலத்தில் அதிகூடிய மாணவர்களும் ஆசிரியர்களும் இருந்துள்ளனர்
.14 03. 1973இல் க.மயில்வாகனமும் 19. 10 . 1973 இல் வீ.வ நல்லதம்பியும் அதிபர்களாகக் கடமை புரிந்தனர் .வீ.வ.நல்லதம்பி காலத்தில் இரட்டை மடிக் கட்டிடம் கட்டப்பட்டு வெள்ளி விழாவும் முகவும் சிறப்பாக நடைப்ற்றதும் குற்றிப்பிடத் தக்கது மின்சார விநியோகம் கிடைத்து ஒளிமமயமானது .மாணவர்கள் கழுத்துப்பட்டி அணிதல் மாணவத் தலைவர்கள் இலச்சினை சின்னம் அணிதல் போன்ற நடைமுறைகள் உருவானது பெற்றோர்கள் உதவியால் கிறிஸ்தவ செபகூடம் வாயுப்பிரப்பாக்கி அறை என்பன கட்டப்பட்டன .( 1978 ). இந்த பாடசாலை மாணவி அமரர் சின்னதுரை வசந்தலேட்சுமி நினைவாக பாடசாலைக்கென வெளி வாயில் இரும்புக் கதவும் வழங்கபட்டது .சி.இராசநாயகம் இப்பாடசாலையின் அதிபராகவும் கொத்தணி அதிபராகவும் நியமிக்கப் பட்டார் (23 10. 1980 .)வர்ததகர் பா.பாலசுந்தரம் அவர்கள் தனது தந்தையார் நினைவாக பாடசாலைக்கு பதினையாயிரம் ரூபாவினை வழங்கி வங்கியில் வைப்பில் இட்டு கொடுத்தார்
தொடர்ந்து க.கொத்தணி அதிபராக வந்தார் .இந்தக் காலத்தில் புதிய வகுப்பரைகூடம் மனையியல் அறை என்பன கட்டப் பட்டன. புங்குடுதீவு ப.நோ.கூ.சங்கத்தினால் பாரிய தண்ணீர் தொட்டி ஒன்று கட்டிக் கொடுக்கப் பட்டது .உயர்தர மாணவர் மன்றத்தினால் இடம்பெயர்தொருக்கு உதவுமுகமாக நாடக விழா ஒன்று நடத்தப்பட்டு உதவி வழங்கப் பட்டது அப்போதைய பாடசாலை வளர்ச்சியில் உள்ளூர் ஆசிரியர்களான ந.தர்மபாலன் ஐ.சண்முகநாதன் தா.கருணாகரன் சே.ஈஸ்வரமூர்த்தி ந.கைலைநாதன் ஈ.ஜெயசீலன் திருமதி வே.ம.வசந்தகுமார் திருமதி தி.கைலைநாதன் திருமதி.ம.இராமச்சந்திரன் பங்கெடுத்து இருந்தனர்.
. . . இல் ஏ சி நல்லையா அவர்கள் கொத்தணி அதிபராக பணி ஏற்றார் .அப்போது பிரபல வர்த்தகர் சந்திரன் (கார்க்காரசந்திரன்) அவர்களினால் முன்பகுதி மதில் கட்டிக் கொடுக்கப் பட்டது இந்தக் காலத்தில் பிரதி அதிபராக இருந்த இளம் சமுதாய பிரதிநிதியான ந தர்மபாலன் உப அதிபராக இருந்தார் இவரே பின்னர் அதிபராகவும் பதில் படுத்தினார் .. . இல் க.பேரம்பலம் கொத்தணி அதிபராக பதவி ஆற்றினார் .அப்போதைய இடம்பெயர்வால் பாடசாலை யாழ் சன்மார்க்க விதியசாலையிலும் பின்னர் யூனிவேர்சல் தனியார் கல்வி நிலையத்திலும் தற்காலிகமாக நடைபெற்றன .. . இல் அதிபராக போருப்பெடுத்ட ந.தர்மபாலன் இன் முயற்சியி ல் பிரவுன் வீதியல் ௩ கொட்டகைகளுடன் ஆர்மபமானது .இந்த ஆரம்பத்துக்கு புங்குடுதீவு ப.நோ கோ சங்க தலைவராக இருந்த ப.கனகலிங்கம் உபதலைவரான ஐ சண்முகநாதன் ஆகியோரின் உதவி அடிப்படையிலாகும் .இந்த பெரு முயற்சியில் ஆ.பேரின்பநாதன் (ப.ம.சங்கம் ) ந.சுந்தரராசா ப.மா.சங்கம் )சு.கருணாகரன் பாடசாலை அபிவிருதிசங்கம் )சு யோ பூராசா தளையசிங்கம் தர்மகுனசிங்கம் ஆகியோரும் குரிப்பிடாத் தக்கவர்கள் இந்த பாடசாலை உதய் பந்தாட்டக் குழுவின் சீருடைகளைபரிஸ் டெக்ஸ் உரிமையாளர் சோமசுந்தரம் அவர்களால் அன்பளிப்பு செய்யப் பட்டது . . . இல் மீண்டும் புங்குடுதீவில் இயங்க ஆரம்பித்துள்ளது க.தர்மகுனசிங்கம் அதிபராக பதவி ஏற்றார் .மாணவர்களினால் துலக்கம் என்ற சன்ச்சிகை வெளியிடப்பட்டு வருகிறது .இந்தப் பாடசாலைக்கு கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் சுவி ஷ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் என்பவற்றின் உதவிகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.
(இன்னும் எழுதுவேன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக