ஞாயிறு, 19 ஜூன், 2011

புங்குடுதீவு  மகா  வித்தியாலயதுக்கான அறக்கட்டளை நிதியம் ஆரம்பம் 
-----------------------------------------------------------------------------------------------------
இந்தப் பாடசாலைக்கான அவ்வப்போது தேவைப்படும் பல்வேறு
செயல் திட்டங்களுக்கு பயன்படுமாறு நிதி உதவி வழங்குமுகமாக நிரந்தர வங்கி வைப்பு தொகையை முதலிட்டு அதிலிருந்து வருகின்ற வட்டிப்பணத்தை உபயோகிக்க முடிவு செய்யபடுள்ளது.இந்த திட்டத்துக்கென ஒரு அறக்கட்டளை நிறுவப்பட்டு அதிகாரசபையில் 1 .பாடசாலை அதிபர்,  2.பழையமாணவர் சங்க செயலாளர் , 3. முன்னாள் அதிபர் திரு .கந்தையா தர்மகுணசிங்கம்4  . நல்லதம்பி பேரின்பநாதன் (விரிவுரையாளர் -யாழ் பல்கலைக்கழகம் ),5  . கார்த்திகேசு குகபாலன் (விரிவுரையாளர் -யாழ் பல்கலைக் கழகம் )  ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர் . தற்போது கனடாவில் வசிக்கும் நல்லையா தர்மபாலன் (முன்னாள் அதிபர் ) அவர்கள் இந்த திட்டத்துக்கான கனடா ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு முதற்கட்டமாக கனடாவில் சேகரிக்கபட்ட நிதியாக ஒன்பது லட்சம் இலங்கை ரூபாக்களை வைப்பிலிட்டுள்ளனர் . இந்த திட்டத்துக்கென மேலதிக நிதி சேகரிப்பில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஊருக்கான  அமைப்புக்கள்,  பழைய மாணவர்கள் ,புங்குடுதீவு மக்கள்,வர்த்தகர்கள்  மற்றும் நலன்விரும்பிகள் இந்த திட்டத்துக்கு மதிப்பளித்து உங்களால் முடிந்த நிதியினை பின்னால் வருகின்ற தொடர்புகளை பயன்படுத்தி வழங்குமாறு கேட்டுகொள்ளுகின்றனர்.நிதி பயன்பாடு,தேவைகள் ,விதிமுறைகள் போன்ற மேலதிக விபரங்கள்,காணொளி காட்சிகள் தற்போது ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளனர் .இத்தோடு பாடசாலைக்கென இணையதளம் ஒன்றிணையும் ஆரம்பித்துள்ளனர் .
Co-Curricular Trust
Pungudutivu Maha Vidyalayam
National Savings Bank (Jaffna Branch)
Saving Account No: 100 060 442 518
With Love
Nalliah Tharmapalan
(Former principal, Pungudutivu Maha Vidyalayam)
Tel: 416 431 4455

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக