சனி, 1 அக்டோபர், 2011


நிரந்தர வைப்பு நிதியத்திற்கான அதிபரின் வேண்டுகோள்
அன்புடையீர்! 


பழையமாணவர்களே! பெற்றோர்களே! நலன்விரும்பிகளே!

            புங்குடுதீவு மகா வித்தியாலய அன்னை தங்களின் உயர்வைக் கண்டு மனநிறைவு அடைகின்றாள். இந்நிலையில் அன்னையும் தன் சேவையினை பூரணமாக வழங்குவதற்கு தங்களின் உதவிக் கரத்தினை எதிர்பார்க்கின்றாள். பௌதிக வளத்தேவைகளை (கட்டிடம், தளபாடம்) அரச நிதியைக் கொண்டு நிறைவு செய்ய முடியும் எனினும் பாடசாலையின் அத்தியாவசிய தேவைகள், இணை பாடவிதானச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தங்களின் உதவியையே எதிர்பார்க்கின்றோம். இந்த வகையில் பின்வரும் தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய கட்டாய தேவை எமக்கு உண்டு.

1. பாடசாலை மாணவர்களுக்கான குடிநீர் வசதியைச் செய்து கொடுத்தல்.

2. மலசல கூடங்களை சுத்திகரிப்பதற்கு தேவையான பொருட்களை   கொள்வனவு  செய்தல்.

3. வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நடாத்துதல், பரிசில் வழங்குதல். 

4. பாடசாலையில் நடைபெறும் சமய, கலாச்சார விழாக்களை (தைப்பொங்கல், நவராத்திரி விழா, ஆசிரியர் தினம், ஒளி விழா) நடாத்துதல்.

5. கற்றல் செயற்பாட்டை ஊக்குவிப்பதற்கான பரிசளிப்பு விழா ஒன்றினை வருடம் தோறும் நடாத்துதல்.

6. எமது பாடசாலை மாணவர்கள் உதைபந்தாட்டத்தில் மாகாண மட்டத்தில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகினர். இவர்களை மேலும் ஊக்கப்படுத்த முறையான பயிற்சி வழங்குவதற்குரிய பயிற்சியாளர், பாதணிகள், சீருடைகள் என்பன தேவைப்படுகின்றன.

7. எமது பாடசாலை மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில்; மிகவும் பின்னடைவாக உள்ளனர். இவர்களுக்கு மேலதிக வகுப்புகளை ஒழுங்குபடுத்தி கற்றல் பெறுபேற்றை உயர்த்துதல்.

8. எமது பாடசாலையில் கற்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும், க.பொ.த. (சாதாரணதர) பரீட்சையில் உயர் பெறுபேற்றைப் பெறும், க.பொ.த. (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களை கௌரவித்தல்.

9. தந்தை, தாயை இழந்து உறவினர்களின் பராமரிப்பில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி ஊக்குவித்தல்.

10. பாண்ட்வாத்திய அணியினருக்கு பொதுவான  சீருடை தேவைப்படுகின்றது.

11. தற்போது பாடசாலையில் வழங்கப்படுகின்ற மதிய உணவுக்கு வழங்கப்படும் நிதி  போதாமலுள்ளது. தரமான, சுவையான உணவை வழங்க வேண்டுமாக இருந்தால் மேலதிக நிதி தேவைப்படுகின்றது.

12. அதிகரித்துவரும் மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் என்பவற்றை ஈடுசெய்தல்.

வாழ்க வளமுடன்.
திரு.ச.கணேஸ்வரன் அதிபர் 
(புங்குடுதீவு மகா வித்தியாலயம்)நிரந்தர வைப்பு நிதியம்

(இணைபாடவிதான அறக்கட்டளை)
           எங்கள் பாடசாலைக்கு ‘இணைபாடவிதான அறக்கட்டளைஎன்னும் பெயரில் நிரந்தர வைப்பு நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு முதற் கட்டமாக பதினொரு இலட்சம் ரூபா (1,100,000 ரூபா) வைப்பிலிடப் பட்டுள்ளது என்ற செய்தியை பாடசாலை இணையத் தளத்தினூடாக உலகெங்கிலும் பரந்து வாழும் எங்கள் பாடசாலையின் பழையமாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வருவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அதேவேளை இந்நிதியத்தினை ஆரம்பித்து வைப்பதற்காக முதற்கட்டமாக நிதியுதவி வழங்கிய அன்புக்குரிய பழையமாணவர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகள்.
        இணைபாடவிதான அறக்கட்டளையின் நோக்கம், பாடசாலை மட்டத்தில் வருடாந்தம் நடைமுறைப்படுத்த வேண்டிய இணைபாடவிதானச் செயற்பாடுகளான விளையாட்டுப் போட்டி, தமிழ்த் தினப்போட்டி, ஆங்கில தினம், பரிசளிப்பு விழா, நவராத்திரி விழா, ஒளி விழா போன்ற நிகழ்வுகளை சிறப்பான முறையில் நடாத்துவதற்கு நிதியுதவி வழங்குதல். இதன் மூலம் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு ஊக்கமளித்தல். இந்த அறக்கட்டளையில் வைப்பிலிடப்படும் பணம் மீள எடுக்க முடியாத நிரந்தர வைப்பாகும். இதனூடாக  கிடைக்கும் வட்டி வருமானம் மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை, இதற்கென        நியமிக்கப்பட்டுள்ள      தர்மகர்த்தா சபையினரால் பெற்று   இணைபாடவிதானச்  செயற்பாடுகளுக்கான செலவீடுகளை  மேற்கொள்வதற்கு  இந்த அறக்கட்டளை   அனுமதியளிக்கின்றது. 

தர்மகர்த்தா சபை              
1. பாடசாலை அதிபர்
2. செயலாளர், பழைய மாணவர் சங்கம் 
    (புங்குடுதீவு மகா வித்தியாலயம்)
3. திரு.கந்தையா தர்மகுணசிங்கம் 
    (முன்னாள் அதிபர், புங்குடுதீவு மகா வித்தியாலயம்)
4. திரு.நல்லதம்பி பேரின்பநாதன் 
    (சிரேஷ்ட விரிவுரையாளர்,  யாழ். பல்கலைக் கழகம்)
5. திரு.கார்த்திகேசு குகபாலன் 
    (சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ்.பல்கலைக் கழகம்)
அன்புடையீர்!
எங்கள் பாடசாலையின் அறக்கட்டளைக்கு தங்களின் நிதி பங்களிப்பினைவழங்குவதன் மூலம் இதன் நோக்கம் நிறைவேற உதவுமாறு பாடசாலைச் சமூகம் தங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டி நிற்கின்றது. பாடசாலையின் அறக்கட்டளைக்கு தங்களின் பங்களிப்பினை வழங்க விரும்புவோர் பின்வரும் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவோ அல்லது என்னிடம் வழங்குவதன் மூலமோ தங்களின் பங்களிப்பினை செலுத்தலாம் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
இணைபாடவிதான அறக்கட்டளை
புங்குடுதீவு மகா வித்தியாலயம்
தேசிய சேமிப்பு வங்கி (யாழ். கிளை)
சேமிப்பு கணக்கு இலக்கம்; 1000 6044 2518
அன்புடன்
திரு.நல்லையா தர்மபாலன் (முன்னாள் அதிபர்)
புங்குடுதீவு மகா வித்தியாலயம்
தொலைபேசி: 416-431-4455


கனடாவிலிருந்து
நிரந்தர வைப்பு நிதியத்திற்கு இதுவரை அன்பளிப்பு செய்தோரின் விபரம்
ப.இ
முழுப்பெயர்
வட்டாரம்

தொகை
(க.டொ)
01
திரு.சின்னத்தம்பி கனகலிங்கம்
08
501.00
02
திரு.நல்லையா தர்மபாலன்
08
501.00
03
திரு.வைத்திலிங்கம் வசந்தகுமார்
07
100.00
04
திரு.பொன்னம்பலம் அமிர்தலிங்கம்
08
100.00
05
திரு.சிவசம்பு தனபாலசுந்தரம்
08
250.00
06
திரு.சின்னத்தம்பி கோபாலபிள்ளை
09
100.00
07
திரு.திருநாவுக்கரசு பிரேம்குமார்
02
100.00
08
திரு.சண்முகநாதன் சசிகுமார்
02
500.00
09
திரு.திருநாவுக்கரசு கருணாகரன்
08
500.00
10
திரு.சிவசாமி திருவருட்செல்வன்
06
100.00
11
திரு.மார்க்கண்டு மோகனபாலன்
08
500.00
12
திரு.மார்க்கண்டு தனபாலன்
08
250.00
13
திரு.என்.கே.மகாலிங்கம்
10
100.00
14
திரு.சண்முகநாதன் சந்திரகுமாரன்
03
200.00
15
திரு.நடராசா உதயகுமாரன்
10
100.00
16
திரு.முத்தையா அரியராசா
10
200.00
17
திரு.கந்தையா நாகராசா
07
100.00
18
திரு.சங்கரலிங்கம் சதானந்தன்
11
200.00
19
Dr.கந்தையா ஆனந்தமூர்த்தி
12
500.00
20
திரு.மகாலிங்கம் சிவநேசன்
02
200.00
21
திரு.சோமசுந்தரம் கதிர்காமநாதன்
03
100.00
22
திரு.கனகசபை பேரின்பநாதன்
09
100.00
23
திரு.சுப்பிரமணியம் நித்தியானந்தன்
10
100.00
24
திரு.தர்மலிங்கம் கருணாகரன்
11
150.00
25
திரு.நல்லதம்பி பிரபா
06
200.00
26
திரு.ஐயாத்துரை எதிர்வீரசிங்கம்
08
100.00
27
திருமதி.செல்வராசா கல்விக்கரசி
09
100.00
28
திரு.அருணாசலம் குலசிங்கம்
09
200.00
29
திரு.தர்மலிங்கம் சிவயோகநாதன்
11
100.00
30
திரு.தர்மலிங்கம் நித்தியானந்தம்
08
200.00
31
திரு.நல்லதம்பி பேரின்பநாதன்
06
100.00
32
திரு.கந்தையா சண்முகசுந்தரம்
07
250.00
33
திருமதி.சிவசுப்பிரமணியம் லதா
12
100.00
34
திரு.கனகசபை பேரின்பநாதன்
09
100.00
35
திரு.நல்லையா அருட்பிரபாகர்
07
250.00
36
திரு.நாகலிங்கம் சொக்கலிங்கம்
08
200.00
37
திரு.சண்முகம் செந்தில்முருகன்
01
100.00
38
திரு.முத்தையா ஜெகதீஸ்வரன்
10
100.00
39
திரு.சண்முகலிங்கம் சதாசிவம்
12
150.00
40
திரு.சுப்பிரமணியம் பத்மநாதன்
07
250.00
41
திரு.செல்லத்துரை சபாரெத்தினம்
09
100.00
42
திரு.துரைராசா இரவீந்திரன்
07
100.00
43
திரு.இராசையா பிரபா
07
200.00
44
திரு.வடிவேலு ரூபகாந்தன்
10
200.00
45
திரு.கனகசுந்தரம் சீவரட்ணம்
08
100.00
46
திரு.இளையதம்பி விஜயகுமாரன்
06
200.00
47
திரு.கணபதிபிள்ளைசௌந்தரராசன்
03
100.00
48
திரு.கதிரவேலு சதானந்தன்
01
250.00
49
திரு.யோகி பரராசசிங்கம்
07
300.00
50
சிவசிறி.ப.விஜயகுமாரக்குருக்கள்
10
100.00
51
திரு.வடிவேலு முருகதாஸ்
10
200.00
52
திரு.வடிவேலு வாகீசன்
10
100.00
53
திரு.வைரவநாதன் ஜெகநாதன்
09
100.00
54
திரு.கே.பாலச்சந்திரன்
09
100.00
55
திரு.சோமசுந்தரம் சச்சிதானந்தன்
03
200.00


1 கருத்து: